அன்பே அறிவே ஓடிநீவா
அள்ளித் தருவேன் பாடிநீவா
முன்னும் பின்னும் பார்த்திடுவாய்
முதலில் சாலை விதிமதிப்பாய்
ஆட்டம் போட்டுத் திரியாதே
ஆளை நம்பிப் போகாதே
சுற்றித் திரியும் குள்ளநரி
சூது வாது தெரிந்திடுவாய்
Image credits to its owner only. Not for commercial use. |
பட்டாம் பூச்சி பார்மகளே
பிடித்துத் துன்பம் கொடுக்காதே
தேனீக் கூட்டைப் பார்மகளே
தினமும் சேமி மறவாதே
ஆடிப் பாடும் வயதிதுவே
அயர்ந்து சோம்பிப் படுக்காதே
அலைய வைக்கும் அலைபேசி
அளவ ளாவி மயங்காதே
பரந்து விரிந்த தோட்டம்பார்
பூத்த பூக்கள் பலவிதமே
பொங்கி வருமே நல்லுறவு
போற்றி நீயும் வாழப்பார்
-இரா. விஜயகல்யாணி
#சிறுவர் #பாடல் #மழலை #அன்பு #கல்வி #கவிதை #தமிழ் #விளையாட்டு #அம்மா #கல்வி #பாப்பாப்_பாட்டு #குழந்தை #விஜயகல்யாணி #சிகரம்